சம்பியனைத் தனதாக்கியது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

20 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் நேற்று (ஏப்ரல் 10) ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று காலை(ஏப்ரல் 11)  8.30 மணிக்கு மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கைப் பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன.

அரையிறுதி ஆட்டங்களில் மகாஜனக் கல்லூரியை எதிர்த்து பொலன்னறுவை பெண்டிவெவ வித்தியாலயமும் குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை எதிர்த்து குருணாகல் கவுசிகமுவ வித்தியாலயமும் மோதின.

இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி அணி மோதியது. 4:3 என்ற கோல் அடிப்படையில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி சம்பியனானது.

Share this Article