இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக கடந்த மாதமே சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் இந்த விலையேற்றம் கைவிடப்பட்ட நிலையில் இம்மாதம் அதனை அதிகரிக்கும் எண்ணத்தில் லிட்ரோ நிறுவனம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த மாதம் 4ஆம் திகதியளவில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1198 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றமையானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.