சந்நிதி முருகன் ஆலய தேருக்குச் சென்றவர்களின் வீடு உடைத்து நகை திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழாவுக்குச் சென்ற சமயம் வீடு உடைக்கப்பட்டு பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கரணவாய் வடமேற்கில் நேற்று(ஓகஸ்ட் 30) நடந்துள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் நேற்றுத் தேர்த்திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். வீடு திரும்பியபோது வீடு உடைத்துத் திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபா பணம், 11 அரைப் பவுண் நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article