சண்டிலிப்பாயில் மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய இருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மானிப்பாய், சண்டிலிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவதுடன் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (ஓகஸ்ட் 23) மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கையின் போது மானிப்பாயைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததுடன், வன்முறை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள் மற்றும் இரும்புக் கம்பி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் உதவித்தனர்.

Share this Article