சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண் படுகொலை செய்யப்பட்டமை உறுதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளிச்சமிட்டுள்ளன.

வேலணையைச் சேர்ந்ததும், திருமணத்திற்குப் பின்னர் காரைநகரில் வசித்துவரும் சுரேஸ் குலதீபா 36 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் நேற்று (ஒக். 12) சங்குப்பிட்டி பாலத்துக்கீழ் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சட்ட வைத்தியர் செ. பிரணவன் தலைமையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், அந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது. அவரின் தலையில் கூர்மையான பொருளால் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றி எரித்த பின்னர் கடலுக்குள் வீசப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், நுரையீரலுக்குள் நீர் புகுந்திருந்ததுடன், மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூறாய்வில் வெளிப்பட்டுள்ளது.

அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறும்போது 10 பவுண் நகைகள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சடலத்தில் எந்த நகைகளும் காணப்படவில்லை.

வீட்டை விட்டு புறப்பட்டபோது, வவுனியா நோக்கி ஒரு நண்பியுடன் செல்கிறேன் என்று கூறியிருந்தாலும், இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் அவர் குறிப்பிட்ட நபர்களுடன் சென்றிருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.

அந்த பெண் பாலியல் வன்முறைக்குள்ளாகியிருக்கலாம் என்ற ஊகங்கள் இருந்தபோதும், உடற்கூறாய்வில் அதற்கான ஆதாரம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனப் பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share this Article