சங்கானை வைத்தியசாலைக்கு மருந்துகள் அன்பளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சங்கானை வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டால் வைத்திய சேவைகளை வழங்குவதற்கு வைத்தியர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் .

கடந்த 14 ஆம் திகதி வலிமேற்கு பிரதேச சபையில் நடைபெற்ற சுகாதாரக்குழு கூட்டத்தில், மருந்து தட்டுப்பாட்டால் சங்கானை வைத்தியசாலையின்  வைத்திய சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே நன்கொடையாளர்களை அணுகி மருந்து வகைகளை தருவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்தக் கூட்டத்தில்  பிரதேசசபை தவிசாளரிடம் கோரிக்கை விடப்பட்டது.

அதன்படி பிரதேசசபை உறுப்பினர் வி.உமாபதியின் முயற்சியில் சுப்பையா பொண் அறக் கட்டடளையினரால் 5 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இன்று (பெப்ரவரி 20)வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது .

Share this Article