கொழும்பில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று (ஒக்ரோபர் 21) தெரிவித்துள்ளது.

இன்று மாலை 05.00 மணி தொடக்கம் நாளை காலை 08.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. எனவே கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அம்பத்தல நீர் வழங்கல் மேம்பாட்டு வலுசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகளினால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

Share this Article