கொடிகாமம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விபத்தில் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு(ஏப்ரல் 19) 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன்  பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ்  அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார். இதன்போது முன்னால் வந்த லொறி அவரை மோதித்தள்ளியுள்ளது.
உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி மற்றும் லொறியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Share this Article