நெடுந்தீவுக்கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 09 மீனாவா்கள் கைது செய்யப்பட்டதுடன் அவா்களது படகும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவாி 10) அதிகாலை கைது செய்யப்பட்டது.
நெடுந்தீவுக் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டதுடன் அவா்களின் படகும் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 500 கிலோவிற்கு அதிகமான மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 09 பேரும் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தினை சோ்ந்த 09 பேரும் தற்போது காரைநகா் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
காணொளி காட்சியின் ஊடாக ஊா்காவற்துறை நீதவான் ஜீட்சன் முன்னிலைப்படுத்தப்பட்டாா்கள்
வழக்கை விசாாித்த நீதிபதி அவா்கள் எதிா்வரும் 15 நாட்களுக்கு 25ம் திகதி வரை காரைநகா் கடற்படை முகாமில் இரமேஸ்வர மீனவா்களுக்கு சொந்தமான படகிலேயே தனிமைப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.