தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (ஒக்.02) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

28 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய அஞ்சல் அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்க.இளங்குமரன், வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி நிவேதிகா கேதீசன் , அஞ்சல்மா அதிபதிநாயகம், சாவகச்சேரி பிரதேச செயலாளர் ஆகியோர் புதிய கட்டடத்திற்கானஅடிக்கற்களை நாட்டி வைத்தனர்.