சூழகம் அமைப்பினால் ஊரதீவு , கேரதீவில் சிரமதானப்பணிகள் முன்னெடுப்பு
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவு பகுதியிலும் , ஐந்தாம் வட்டாரமான கேரதீவு பகுதியிலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இப்பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மயானங்களை சூழ்ந்து காணப்பட்ட பற்றைக்காடுகளும் , வீதிகளின் அருகில் காணப்பட்ட பற்றைக்காடுகளும் பெக்கோ இயந்திரம் ஊடாக ரூபாய் 70000 செலவில் அகற்றப்பட்டன . அத்தோடு பொதுமக்களின் பாவனைக்காக கிணறொன்று அமைக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது .
மேற்படி சிரமதானப்பணிகளுக்காக சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளான திரு . நவரத்தினம் சிவானந்தன் ( சிவா ) மற்றும் திருமதி ஆனந்தி சுரேஷ் ஆகியோரின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டிருந்தன