குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் வீதி துரித கதியில் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்புடைய பணிகள் தற்போது வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளன.
குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியின் முழுமையான புனரமைப்பு பணிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெற்றது.
கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, குறிகாட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்கு செல்லும் பாதை மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
இந்நிலையைத் தொடர்ந்து, தற்போது இறங்குதுறைக்கு செல்லும் பாதை அகலப்படுத்தப்படுவதுடன், புனரமைப்பு பணிகளும் துரிதமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த முன்னேற்ற பணிகளை பார்வையிடும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.