குடும்பப்பெண்ணின் விரல்கள் துண்டிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

​வட்டுக்கோட்டை  முதலியகோவில் பகுதியில் நடந்த  வாள்வெட்டுச் சம்பவத்தில் இளம்பெண்ணின் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில்…..

வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய கணவரை வழிமறித்த அயல் வீட்டு இளைஞன், அவரிடமிருந்து சைக்கிளைப் பறித்துள்ளான். இது குறித்துக் கேட்கச் சென்ற மனைவிக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து வெட்டியுள்ளான் இதில் தற்காப்புக்காக கையை நீட்டிய அந்தப் பெண்ணின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டு தற்போது அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

தாக்குதல் நடத்திய இளைஞன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுவதுடன் தற்போது தலைமறைவாக உள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை வலைவீசித் தேடி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article