கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
பாதுகாப்பற்ற வீட்டுக் கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் கிங்சிகா என்ற சிறுமியே உயிரிழந்தவராவார்.
மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (மே 27) விழுந்துள்ளார்.
சிறிது நேரம் சிறுமியைக் காணாத நிலையில் தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Share this Article