கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மன்னார் நோக்கிப் பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(ஏப்ரல் 13) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

நவாலி மானிப்பாயைச் சேர்ந்த 36 வயதுடைய செல்வ மகேந்திரன் கமலரூபன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த போது முழங்காவில் பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனைக்காக வழி மறித்தும் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதன்போது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் மன்னார் முருங்கன் வரை பயணித்துள்ளார். பின்னர் முருங்கன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article