காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழில் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய சுகந்தன் ஜான்சி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

காய்ச்சலின் தீவிர தன்மை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share this Article