காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை இடித்தழித்தவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வீடொன்றை இடித்தழித்த பெண் உட்பட இருவர் நேற்று (மார்ச் 12) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீட்டை இடிக்க பயன்படுத்திய ஜே.சி.பி. வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள காணியொன்றில் ஆள்களின்றி கிடந்த வீட்டை சுற்றி கம்பித் தூண்கள் நடப்பட்டு, முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன.

அந்த காணிக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்துச் சென்று, வாகனத்துக்குள் உடனமர்ந்து சாரதியின் உதவியோடு பெண்ணொருவர், வேலிகளை இயந்திரத்தால் அகற்றி, உள்நுழைந்து காணியில் இருந்த வீட்டை இடித்து, தரைமட்டமாக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, இந்தக் காணி தொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்றும் நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article