காங்கேசன்துறை துறைமுக ஆய்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காங்கேசன்துறை துறைமுக எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு, அடங்கிய குழுவினர் களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்  ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் சு.கபிலன், தேசிய மக்கள் சக்தியின்  அமைப்பாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் துறைமுகத்தை நேரில் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வு விஜயத்தின் போது, துறைமுகத்தின் தற்போதைய நிலை, முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், கடல் வர்த்தகத்திற்கும் புதிய வலுசேர்க்கும் நோக்குடன் தேசிய மக்கள் சக்தி அரசு திட்டமிட்ட, திடமான அபிவிருத்தி பயணத்தின் ஒரு அங்கமாக இவ்விஜயம் அமைந்துள்ளது.

Share this Article
Leave a comment