இலங்கையில் தற்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட் 19 பயணத்தடைகளின் காரணமாக விண்ண்ப்பங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நெடுந்தீவு வாழ் உறவுகளின் நிலமையினைக் கருத்திற் கொண்டு விண்ணப்பபடிவங்கள் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் நண்பர்கள் வட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் தரம் 3இற்கு இலங்கையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப்பரிட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வி நிர்வாக சேவை தரம் 03இற்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப்பரிட்சை ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும்
இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவகத்தின் 2021ம் ஆண்டுக்கான புதிய பயிற்சி நெறிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்குறித்த விடயங்களது முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானியினை நண்பர்கள் வட்டத்தின் அலுவலகத்தில் பார்வையிட்டுக் கொள்வதுதுடன் தங்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை நிழற்பிரதி செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக தொடர்புக்கு – 0771816052