கலாசார சீரழிவில் ஈடுபட்ட இரு பெண்கள் யாழில் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய அக்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் அயலவர்களால் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (29) குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் முற்றுகையிட்டு சோதனையிடப்பட்டது.

இதன்போது உரிய பதிவுகள் இன்றி விடுதியில் தங்கி இருந்த தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களையும், குறித்த விடுதியின் முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article