கறுப்பு பட்டியலில் இருந்து தமிழர்கள் இருவரின் பெயர்கள் நீக்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு தமிழர்களது பெயர் அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக குறித்த இருவரினதும் பெயர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானன சூழலிலேயே ரமேஷ் என்ற நிக்லபிள்ளை அன்டனி எமில் லக்ஸ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோரின் பெயர்கள் குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article