கரவெட்டி மத்தி கிராம அலுவலகத்தில் பல்கலை மாணவர்களுக்கான பங்கேற்பு கிராமிய மதிப்பீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கரவெட்டி பிரதேச செயலக பிரிவிலுள்ள கரவெட்டி மத்தி கிராம அலுவலர் அலுவலகத்தில் கடந்த 6 ஆம் திகதி புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட சமூகவியல் துறை இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான பங்கேற்பு கிராமிய மதிப்பீடு (Participatory Rural Appraisal ) செயற்பாடானது நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூகவியல்துறைப் பேராசிரியர், பல்கலைக்கழக மாணவர்கள், கிராம அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article