கட்டைக்காடு விபத்தில் 22 வயது இளைஞன் சாவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 8) இரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார், முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த செபமாலை நிரோஜன் (வயது-22) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

கட்டைக்காடு இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துத் தொடர்பான விசாரணைகள் மருதங்கேணிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

Share this Article