கச்சதீவு கைகாட்டி புனித அந்தோனியார் திருச்சுரூபம் புனரமைப்பின் பின் ஆசீர்வதிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கச்சதீவில் அமையப்பெற்ற கைகாட்டி புனித அந்தோனியார்  திருச்சுரூபம் புனரமைப்பின் பின்னர் நேற்றையதினம் (22/03)  நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார், ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார்.

யாத்திரையை நிறைவுசெய்து கச்கதீவிலிருந்து யாழ் குடாநாடு நோக்கி பயணிக்கும் பக்தர்களின் பயணப் பாதையை வழிகாட்டும்  விதமாக ஆண்டாண்டு காலமாக அறியப்பட்டும் பின்பற்றப்பட்டும் வந்த “கைகாட்டி அந்தோனியார்” திருச்சுரூமே  இவ்வாறு மேடை  அமைக்கப்பட்டு ,  மெருகூட்டப்பட்டு புனருத்தான பணிகளூடாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

கச்சதீவிலிருந்து நெடுந்தீவு மற்றும் குடாநாடு நோக்கி பயணிக்கும் மீனவர்கள் மற்றும் பக்தர்களின் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் வரலாறு வழியே அறியப்பட்ட குறித்த திருச்சுருபம் பழைய ஆலயத்திற்கு முன்புறமாகவும் நெடுந்தீவு பிரதேசசெயலக உற்சவகால பணிமனைக்கு முன்பதாகவும் கரையோரமாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

டித்வா புயலூடாக பாதிக்கப்பட்ட கச்சதீவின்  கரையோரம் தொடர்பில் யாழ் மறைமாவட்ட ஆயர் தந்தையின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார், யாழ் ஆயரின் ஆலோசனையின்பேரின் புனருத்தான பணிகளை விரைந்து முன்னெடுத்தும் நேற்று புனிதப்படுத்தியிருந்தார்.

புனிதரின் பரிந்துரை வழியாக உலக நாடுகளிடையே மூண்டுள்ள போர்கள் நிறைவை எட்டவும், அமைதி இழந்த ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியானதும் அமைதியுமான வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றும் இதன்போது அருட்பணியாளர் பிரார்த்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment