க.பொ.த சாதாரண தர முன்னோடி பரீட்சையை இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து நடத்துங்கள்-கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நவராத்திரி விழா நிமித்தம் மத்திய மாகாப் பாடசாலைகளில் இம்மாதம் 23 ஆம் திகதியிலிருந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிற்கு கடித மொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா சார்ந்த பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் வகையில் இவ் வருடம் இம் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை முன்னோடிப் பரீட்சை நடைபெற மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஏற்பாடானது நவராத்திரி விழா தமிழ் பாடசாலைகளில் இடம் பெறுவதற்கு ஒரு தடையாகவிருக்கும் என்ற விடயத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கவனத்திற்கு மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்டது.

இதனால் கல்வி இராஜாங்க அமைச்சர் ஒரு நீண்ட விளக்ககடிதத்தினை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ சுமகேவிற்கு அனுப்பி வைத்துள்ளதோடு கல்விப் பொது தராதர சாதாரண தர முன்னோடிப் பரீட்சையை பிற்போடுமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார.

இந்த விடயத்தினை அறிந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் உடனடியாக செயற்பட்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பித்து நவம்பர் 4 ஆம் திகதி முடிவுறும் வண்ணம் நடத்துமாறு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Share this Article