பழைய அப்பியாசக் கொப்பிகளில் இருந்து பாவிக்காத தாள்களைப் பிரித்தெடுத்து புதிய கொப்பிகளாக வடிவமைக்கப்பட்டு நெடுந்தீவு மாணவர்கள் 60 பேருக்கு வழங்கப்பட்டது.
மானிப்பாய் லியோக் கழகத்தின் அனுசரணையுடன், நெடுந்தீவு பிரதேச செயலகம் இணைந்து “ஒரு காகிதத்தின் பயணம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வை நேற்றுமுன்தினம் (மார்ச் 11) ஏற்பாடு செய்திருந்தனர்.
நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 60 பேருக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உதவி பொலிஸ் பரிசோதகர், மானிப்பாய் லியோ கழகத்தனர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.