உரும்பிராயில் ஒருவர் அடித்துக் கொலை – சந்தேகநபர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(நவம்பர் 18) இரவு நடந்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிந்தவர் உரும்பிராய் சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவர் என்று தெரியவருகின்றது.

உணவகத்துக்கு வந்த ஒருவர் அங்கு எழுந்த முரண்பாட்டை அடுத்து, பணி முடித்துச் சென்றவரைப் பின்தொடர்ந்து சென்று தாக்கினார் என்று கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கானவர் வீதியில் வீழ்ந்து நினைவிழந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆயினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் ஆனந்தராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்ட்டுள்ளன.

Share this Article