நெடுந்தீவில் ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்தான முகாம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் தற்போது வடமாகாணத்தில் குருதித் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந் நிலமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் குருதி வழங்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் கிருஸ்ணபிள்ளை அவர்களின் அவசர வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவில் எதிர்வரும் 13ம் திகதி (மே – 13) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை வரை ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நெடுந்தீவு உறுவுகள் வருகை தந்து உயிர்காக்கும் உன்னத பணியான இரத்தான நிகழ்வில் பங்கு கொண்டு குருதிக் கொடையினை வழங்குமாறு அன்பாக கேட்கப்படுகின்றீர்கள்
மேலதிக தகவல்களுக்கு ஊரும் உறவும் அமைப்பின் சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.நோபேட் ஜெயராசா ஜெனட்ஜான்சன் 077-9606612