உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு, பொலிஸ் சார்ஜனாக உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (ஒக்ரோபர் 5) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (ஒக்ரோபர் 06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காரை செலுத்தி தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப பொறியியளாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article