உணவகம் ஒன்றில் உணவருந்தியவர் மயங்கி வீழ்ந்து சாவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி விட்டு சோடா பருகிய நிலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ரவீந்திரராசா ரசிந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த உணவகத்தில் உணவருந்தி விட்டு சோடா குடித்துள்ளார். இந்நிலையில் மயக்கமேற்பட்டவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலைக்கு வருகை தருவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் இறந்ததற்கான காரணம் கண்டறியப்படாததையடுத்து மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Share this Article