இளவாலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி மாபெரும் துடுப்பாட்ட போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஆரம்பமாக மாபெரும் துடுப்பாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் இப்போட்டியில் பங்குகொள்ள விரும்பும் அணிகள் எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இளவாலை மெய்கண்டான் ம.வி மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியின் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

* அணிக்கு 9 வீரர்கள்

* 6 பந்துபரிமாற்றங்கள்

* போட்டிகள் அனைத்தும் குறித்த மைதானத்திலேயே இடம்பெறும்

* அனைத்து போட்டிகளும் வார இறுதிநாட்கள்/ பொது விடுமுறை நாட்களிலேயே நடைபெறும்

* நடுவரின் தீர்ப்பே இறுதியானது

* ICC விதிமுறைகளுடன் போட்டிகள் இடம்பெறும்

* விலகல் முறையிலான போட்டிகள்

* போட்டிகள் ஆரம்பமாவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் அணிகள் வருகைதரவேண்டும்

* போட்டி அட்டவனை 5 ஆம் திகதி இரவு சங்கத்தின் முகநூல்பக்கத்தினூடாக பகிரபடும்

* அணிகள் துடுப்புமட்டைகள், பந்துகள் கொண்டுவருதல் வேண்டும்

*பதிவுக்கட்டணம்- 2000/= (05-05-2023 திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும்)

பதிவுகளுக்கான தொடர்புகளுக்கு 0779100963  0775002732  0776087318

Share this Article