இலவச ‘கற்றாக்’ சத்திர சிகிச்சைக்குப் பெயர் பதிவு செய்யலாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை (கற்றாக்) சத்திர சிசிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ். போதனா மருத்துவமனையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவச கண்ட சத்திர சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான நோயாளர்களைத் தெரிவு செய்யும் கண் பரிசோதனை முகாம்கள் பின்தங்கிய பிரதேசங்களில் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரண்டாவது கண் பரிசோதனை முகாம் வேலணை, மருதங்கேணி பிரதேச மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளன.

கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Share this Article