இலங்கையில் “பிட்கொயின்” பாவனையை அனுமதிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர நிராகரித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக “பிட்கொயின்” பாவனை பொருத்தமானது என்று கோடீஸ்வரும், முதலீட்டாளருமான பில் டிப்பர் ஆலோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்தபோதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் “பிட்கொயின்” பயன்பாடு நூறு வீதம் யாதார்த்தம் இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர், அதனால் நெருக்கடி மேலும் மேசமடையலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயத்தை பரிசீலிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி இன்னமும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பிட்கொயின்” என்பது பரவலாக்கப்பட்ட இலத்திரனியல் பணமாகும். இதில் வங்கியின் தலையீடின்றி கொள்வனவு, விற்பனை மற்றும் நாணயபரிமாற்றங்களை நேரடியாக மேற்கொள்ள முடியும். இது நிகழ்நிலை பதிப்பு நாணயத்தை போன்றதாகும். மக்கள் “பிட்கொயினை” ஒருவரின் இலத்திரனியல் பணப்பைக்கு அனுப்பிவைப்பதுடன் அவர்களும் ஏனையோருக்கு “பிட்கொயினை” அனுப்பி வைக்கலாம். இது முதலீடு செய்வதற்கான நவீன போக்காகும்.