இலங்கை விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு!-விமானப்படை சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புத்தளம், கற்பிட்டி, கண்டல்குளி விமானப்படைத் தளத்தில் நேற்று (செப்ரெம்பர் 26) மாலை 5.30 மணியலவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பயிற்சியின் போது வெடிகுண்டை செயலிழக்கச் செய்யச் சென்ற வேளை இடம்பெற்ற குறித்த வெடிப்புச் சம்பவத்தில் விமானப்படை சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இன்னொரு விமானப்படை வீரர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article