இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது

அதன்படி, மின்சார உற்பத்தி, கடத்தல் விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் ஆறு தனித்தனி துணை நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன.

சில குறிப்பிட்ட சரத்துக்களைத் தவிர, 2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் ஏனைய அனைத்து விதிகளும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மின்சாரசபையின் மறுசீரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன

Share this Article
Leave a comment