சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்கு பகுதியில் இன்று (செப்.25) இடம்பெற்றவிபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர்படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…
யாழ் சாவகச்சேரியில் இருந்து யாழ் நோக்கி சென்ற டிப்பரை அதே திசையில்சென்ற மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் சாலை விதிக்கு முரணாக முந்திச்செல்ல முற்பட்ட வேளை எதிர் திசையில் யாழில் இருந்து சாவகச்சேரிநோக்கி சென்ற இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதிதூக்கிவீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயை இளைஞர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவத்தில் மீசாலை புத்தூர் சந்தி பகுதியை 20 வயதானதிலகீஸ்வரன் ஜதுஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம்தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.