இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளைவழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ்குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்புதிய முறையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கைஎடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை வார நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் , இனிமேல், பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லவேண்டியதில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது .இந்த முறைப்பாடுகளை ( TELL IGP ) என்ற பொலிஸ் இணையதளம் ஊடாகவழங்கினால் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ்அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில்கொழும்பு மாவட்டத்தில் இந்த நடவடிக்கை முதலில் ஆரம்பிக்கப்படுள்ளதுடன் , 22 பொலிஸ் நிலையங்களிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த நடவடிக்கையானதுஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் ஒன்லைன் மூலம் முறைப்பாடுகளைவழங்கினால் முறைப்பாடுகள் முறையாக விசாரிக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது