இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஒக்ரோபர் 31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this Article