வடக்கு மாகாண ஆசிரியர் சேவையின் வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் (2024) கோரப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை நிகழ்நிலை முறையினூடாக சமர்ப்பித்தல் வேண்டும்.
வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் NP/20/ET/F/2/Annu.Tra/2024 ஆம் இலக்க 2023.07.25 ஆம் திகதிய கடிதம் சார்பாக இலங்கை ஆசிரியர் சேவையின் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இடமாற்றம் பெறத்தகைமை உள்ள ஆசிரியர்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் www.edudept.np.gov.lk எனும் இணையத்தளத்தில் E-Teacher Transfer எனும் பகுதியினை சொடுக்குவதன் (Click) ஊடாக ஆசிரியர்கள் தம்மைப் பதிவு செய்ததன் பின்னர் இடமாற்றத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிப்பதுடன், நிகழ்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட குறித்த நிகழ்நிலை முறையிலான விண்ணப்பப்படிவத்தினையே அச்சுப்பதித்து, அதிபர் ஊடாக 2023.08.12 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலக பொதுநிர்வாகக் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேற்படி நிகழ்நிலை முறைமை தொடர்பான மேலதிக விபரங்களை 0212242810 எனும் தொலைபேசி ஊடாகவோ, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் காணப்படும் வழிகாட்டல் கையேட்டின் ஊடாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
இம்முறையினூடாக ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக எமது சமவிலக்க 2023.07.26 ஆம் திகதிய “மாகாணங்களுக்கிடையிலான மற்றும் வலயங்களுக்கிடையிலான ஆசிரியர்கள் இடமாற்றம் கோருமிடத்து கவனிக்க வேண்டிய ஆவணங்கள்” எனத் தலைப்பிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அறிவித்தல்களையும், வழிகாட்டுதல்களையும் தங்கள் பாடசாலையில் கடமையாற்றும் இடமாற்றத்திற்கு தகைமை பெறுகின்ற ஆசிரியர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.