அஸ்வெசும கடிதத்தை பெற காத்திருந்த முதியவர் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எல்ல பிரதேச செயலகத்திற்கு அருகில் நேற்று(ஜூலை 27) காலை வரிசையில் காத்திருந்த ஒருவர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு தகுதி பெற்றவர் என்பதற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ளவே 77 வயதான குறித்த நபர் வரிசையில் காத்திருந்துள்ளார்.

நமுனுகுல பிங்அராவ தோட்டத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான இராமசாமி குழந்தைவேலு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான கடிதத்தை பெற்றுகொள்வதற்காக பிரதேச செயலகங்களில் இன்றும் அதிகளவானோர் கூடியிருந்தனர்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பிரதேச செயலகங்களூடாக கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

நலன்புரிக்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு வங்கி கணக்கை திறப்பதற்கு இந்த கடிதமானது அவசியமாகும்.

Share this Article