அல்வாயில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி கொலை!- மூவர் மறியலில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அனுப்பி வைத்திருந்தார்.

அதன் அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டியை பராமரித்துவந்த இருவர் வீட்டு வேலையாள் அடங்கலாக மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் நேற்று (நவம்பர் 9) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

Share this Article