அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து இடையூறுசெய்ததாக தெரிவித்து 08 பேர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்குஎதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்று(ஒக்.08) போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இந்தநிலையில் இன்று(ஒக்.09) நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமானவாகனத்தில் குறித்த இடத்திற்கு கழிவுகளை கொண்டு வந்த சமயம்அப்பகுதியில் மக்கள் கூடி வாகனத்தை மறித்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்துசம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அங்கிருந்தவர்களோடுபேச்சுக்களை நடத்தி, இந்த முறை வாகனத்தை அனுமதிக்குமாறு கோரினர். அதனையடுத்து வாகனத்தை செல்ல மக்கள் அனுமதித்தனர்.
இந்தநிலையில் , யாழிலுள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் கழிவுகளைகொட்ட வந்த போது, அவர்களின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடாவடியில் ஈடுபட்டு பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றச்சாட்டில் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.