அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப்போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்.மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள, அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப்போட்டி, எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிடையே நடத்தப்படவுள்ள குறித்த சுற்றுப்போட்டிக்குரிய போட்டி அணி ஒழுங்கு அட்டவணைக்கு அமைவாக எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு, ஆண் மற்றும் பெண்களுக்கான சதுரங்கப் போட்டி யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திலும், 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கரம் போட்டி பெண்களுக்கு காலை 8.30 மணிக்கும், ஆண்களுக்கு முற்பகல் 11.30 மணிக்கும் கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூப்பந்து டப்போட்டிகள் கொக்குவில் இந்துக்கல்லூரி பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் பெண்களுக்கு காலை 8.30 மணிக் கும், ஆண்காளுக்கு நண்பகல் 12.15 மணிக்கும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை கலப்பு அணியின் பூப்பந்தாட்ட போட் டிகளும், கொக்குவில் இந்துக் கல்லூரியின் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் காலை 8.30 மணிக்கு நடைபெற விருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய போட்டிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் நடைபெறவிருப்பதாகவும், குறித்த விளையாட்டுப் போட்டிகள் யாவும் பொதுமக்களுக்கான சேவையைப் பாதிக்காத வகையில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article