அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் ஹோர்முஸ் – ட்ரம்ப்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read
EVIAN-LES-BAINS, FRANCE - JUNE 17: U.S. President Donald Trump attends a press conference during the G7 Leaders' Summit on June 17, 2026 in Evian-les-Bains, France. Leaders from the Group of 7 (G7) countries convened in Evian, France, near the Swiss border, for their annual summit to discuss challenges to peace and security for Ukraine and Europe, the situation in the Middle East, and other geopolitical issues. (Photo by Anna Moneymaker/Getty Images)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில்,

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பாராட்டிய ட்ரம்ப், அதனை “எஃகு சுவர்” என பலரும் அழைப்பதாகக் குறிப்பிட்டார் மேலும், ஈரானால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்கு எரிசக்தி உள்ளிட்ட பொருட்களின் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக, அமெரிக்கா கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

எனினும், ஈரான் இந்தக் கூற்றை கடுமையாக நிராகரித்து வருகிறது. ஈரானிடம் தற்போது கடற்படை மற்றும் விமானப்படை இல்லை என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.

மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பெருமளவில் சிதைக்கப்பட்டு பின்வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது பதிவின் இறுதியில், “ஈரான் இனி மத்திய கிழக்கின் கொடுமைப்படுத்துபவன் அல்ல” என்று கூறிய ட்ரம்ப், “அல்லாஹ்வுக்கே புகழ்!” என குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானின் நிபந்தனைகள் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை, இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை தனது முற்றுகை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

இது நவம்பர் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரானுடன் “அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதையும், அந்நாட்டிடம் பணம் இல்லை என்பதையும் அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Share this Article
Leave a comment