அமரர் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உறவினர்களால் நெடுந்தீவு வீரர்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டி இறுதிச் சுற்றுப்போட்டி இன்று (ஜீலை 18) காலை 10.00 மணிக்கு சென்ஜோன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது.
இளைஞர்கள் இணைந்து அணிகளாக போட்டிகளில் பங்கு பற்றினார்கள் இறுதிப்போட்டியில் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழ இளைஞர்களும் சென்ஜோன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்களும் இணைந்து கொண்டனர்.
இப் போட்டியில் சென்ஜோன்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் வெற்றி பெற்று ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தினை தனதாக்கி கொண்டாhர்கள்
வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணமும் பரிசில்களும் அமரர் பிரான்ஸ்சிஸ் சேவியர் அவர்களின் உறவினர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.