நான்கு துறைகளை அத்தியாவசியச் சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலாளர் ஈ.எம். எஸ். பி. ஏக்கநாயகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார வழங்கல், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் – விநியோகம், தபால் சேவை, சுகாதார சேவை ஆகிய நான்கு சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.