2025 ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை எட்டுவதற்கு அடுத்த வருடம் முதல் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவது மிகவும் கட்டாயமானது என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான தலைவர் பீட்டர் போவர் இது குறித்து தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கு முன், நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களையும் முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு பின்னரே அதற்கு வரி வசூலிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரி விதிக்கப்படும் சொத்தை முறையாக பதிவு செய்திருப்பது அவசியம் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்பார்த்த வரி வருவாய் இலக்குகளை இதுவரை எட்டாத காரணத்தால், சர்வதேச நாணய நிதியம் இதனைப் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாணய நிதி நிதியம் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 290 மில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவான கடன் தொகையில் இதுவரை இரண்டு தவணைகளில் 670 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
மேலும் அடுத்த கடன் தவணைகளை அனுமதிக்கும் முன் அடுத்த மறுஆய்வு அடுத்த மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு இடையே செய்யப்பட உள்ளது.