அச்சுவேலியில் வெங்காயம் நடுவதற்கு இயந்திரம் கண்டுபிடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெங்காயச் செய்கையினை இலகுவாக்கும் வகையில், வெங்காயம் நடுகைசெய்யும் இயந்திரத்தை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

உழவு இயந்திரத்தின் (லான்ட் மாஸ்டர்) பகுதிகளைப் பயன்படுத்தி இந்த இயந்திரத்தை அவர் வடிவமைத்துள்ளார்.

இந்த இயந்திரத்தின் மூலம் வெங்காயம் நடுகை செய்யப்படும் பட்சத்தில் செலவுகள் பல மடங்காகக் குறைக்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி, முன்னாள் விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாய அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article