நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்று (October – 08) பி.ப.3.00 மணியளவில் Covid – 19 இரண்டாவது அலைக்கான பாதுகாப்பு தொடர்பான அவசர ஒன்றுகூடல் பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் ஒன்றுகூடலில் நெடுந்தீவின் பங்குத்தந்தை , இந்துமதகுருக்கள், தேவசபையின் போதகர், பிரதேச சபைத்தலைவர், பொதுச்சுகாதார உத்தியோகத்தர், பொலிஸ் பொறுப்பதிகாரி, கடற்படை கட்டளை அதிகாரி, செஞ்சிலுவைச் சங்கத்தலைவர், கிராம அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவுக்கான பாதுகாப்பான கடல், தரைக்கான போக்குவரத்து , ஆலயங்கள், கோயில்களில் தற்போது கடைப்பிடிக்கவோண்டிய நடைமுறைகள், வியாபரஸ்தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்கள் கூடுமிடங்களில் கடைப்பிடிக்கவோண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இவ் முடிவுகளின் அடிப்படையில்
01) சென்ற 04.10.2020 அன்று புங்குடதீவைச்சேர்ந்த பெண்களுடன் யாழ்ப்பாணம் இருந்து பஸ்சில் குறிகட்டுவான்வரை அதைத்தொடர்ந்து நெடுந்தீவுக்கான படகுகளில் பயணத்தை மேற்கொண்ட 16 குடும்பங்களைச் சேர்ந்த 59பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ் சுயதனிமைப்படுத்தலை அவர்கள் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் தவறும்பட்சத்தில் அவர்களை கட்டயமாக தனிமைப்படுத்தல் நிலயத்திற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும்.
02) எமது பிரதேச மக்களின் நலனைக்கருத்திற் கொண்டு ஆலயங்கள், கோயில்களில் வழிபாடுகளை நடாத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டப்பட்டது.
03) வியாபார ஸ்தலங்களில் பணிபுரிவோர் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் பணிக்கப்பட்டது.
04) மக்கள் பொது இடங்களில் அனாவசியமாக கூடுவதை இயன்ற அளவுக்கு தவிர்த்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டதுடன் அத்தியவசிய தேவைகருதி வெளியில் நடமாடும்போது முகக்கவசம் அணித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அணியாதவர்ள்மீது தகுந்தநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
05) நெடுந்தீவு குறிகட்டுவான் படகுச்சேவையானது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குமுதினிப்படகு மாத்திரம் சேவையில் ஈடுபடும்.
அது காலை 6.00 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீண்டும் காலை 8.00 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவை நோக்கி புறப்படும். அது மீண்டும் பி.ப.2.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீண்டும் பி.ப.4.00 மணிக்கு குறிகட்டுவானிலிந்து நெடுந்தீவை நோக்கி புறப்படும் இதில் நெடுந்தீவில் வசிப்போர் மாத்திரம் பயணம் செய்யமுடியுமெனவும் இதற்கேற்ரால்போல் பஸ் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இவ் முடிவுகள் , தீர்மானங்கள்யாவும் நமது பிரதேச மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே எடுக்கப்பட்டன எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டப்படுகின்றார்கள்.