பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின்உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும்புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாகஇருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறானவெளியீடுகளுக்கு ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்குகள், புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ள விசாரணைகள் அல்லது பொலிஸாரின் நடவடிக்கைகளைபுகைப்படம் அல்லது காணொளி எடுத்து ஊடகங்களில் வெளியிடதடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான விடயங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திவடிவமைத்து ஊடகங்களில் வெளியிடவும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளைஊடகங்களில் வெளியிடுவதால் பொலிஸாரின் விசாரணைகளில் பாதிப்புஏற்படலாம் அல்லது குற்றங்கள் அதிகரிக்கலாம் என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவினரால் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும்காணொளிகளை மாத்திரமே ஊடகங்களில் வெளியிட வேண்டும்.
பொலிஸாரின் அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லதுகாணொளிகளை ஊடகங்களில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்படாத, தடைசெய்யப்பட்ட அல்லது AI தொழில்நுட்பத்தைபயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளைஊடகங்களில் வெளியிட்டால் அந்தந்த ஊடகங்களின் தலைவர்கள் அதற்குபொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்